இயக்குனர் SP.ஜனநாதன்: பேராண்மை - விமர்சனம்

இயக்குனர் SP.ஜனநாதன்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்.
மக்களின் இயக்குனர் மக்களுக்கான இயக்குனர்
தமிழின் மாற்று சினிமாவின் அடையாளம் , ஆரம்பம்
தேசிய விருது பெற்ற இயக்குனர்

2003 -இயற்கை
2006- ஈ
2009-பேராண்மை


உலகாயுதா தமிழ் டாக்கி விருது

உலகாயுதா தமிழ் டாக்கி விருது

Wednesday, August 25, 2010

பேராண்மை - விமர்சனம்

பேராண்மை - தமிழில் இப்படி ஒரு படமா!!!!!

மூன்றாவது முறையாக அசத்துகிறார் 'தோழர்' ஜனநாதன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நம் நாட்டின் சாதி அவலத்தையும், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாடுகளின் கூலிப்படை சதிகளையும், பெண்களின் சக்தியையும், திரைப்படத்தில் பேசமுடிகிற ஒரு இயக்குனர் நம்மிடம் இருக்கிறார் என்பது மிகுந்து ஆச்சர்யம்.


அதே வேளையில் சாதியை பற்றி பேசும் வசனங்களையும் அமுக்கிய சென்சார் போர்டின் கடமையுணர்ச்சி கவலை அளிக்கிறது. (உபதகவல் : அமெரிக்காவில் அமெரிக்க அதிபரை நேரடியாக கிண்டல் செய்தாலும் கேவலப்படுத்தினாலும், அப்படத்தை வெளியிட முடியும்.)
.
படத்தின் கதை இதுதான். பழங்குடி சமூகத்தை சார்த்த ஒருவன் (ஜெயம் ரவி) வன அதிகாரியாக இருக்கிறான். அவனின் மூத்த அதிகாரி (பொன்வண்ணன்) முதல், அங்கு ஒரு கல்லூரிக்கு பயிற்சிக்கு வரும் கல்லூரி பெண்கள் குழு (சிலர் மட்டும்) வரை, அவன் சாதி காரணமாக அவனை வெறுக்கவும், கீழாய் நினைக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் காட்டுக்குள் நாயகனுடன் செல்லும் ஐந்து கல்லூரி பெண்களும், அந்த காட்டுக்குள் இருந்து, இந்தியாவின் விவசாய செயற்கைக்கோளை வீழ்த்த வரும் வெளிநாட்டு கூலிப்படையை காண்கின்றனர். அவர்களை முயற்சியை தடுத்து நிறுத்தினார்களா என்பது மீதக் கதை.
.
வண்புணர்வே இல்லாத, காட்டை மட்டும் நம்பி, காடுகளுடன் வாழும் பழங்குடி மக்களை சார்ந்த நாயகன் ஜெயம் ரவி. பெண்களுக்கும், மாடுகளுக்கும் பிரசவம் பார்க்கக்கூடியவன். தாயுமானவன். (தமிழ் சினிமாவில், கோவணம் கட்டி நடிக்கும் அளவுக்கு தைரியம் இருக்கிற தற்போதைய நாயகன்!!!). சாதியை எள்ளி நகையாடும் பொன்வண்ணனும், மற்றவர்களும். கூடவே கம்யூனிசம் பேசும் இயக்குனர். உலக அரசியல், பொருளாதாரம், சமூக ஏற்றத்தாழ்வு, இயற்கை விவசாயத்தின் மகத்துவம், காடுகளை பற்றிய, அங்கு வாழும் விலங்குகளை பற்றிய தகவல்கள், போர் ஆயுதங்களை பயன்படுத்தும் முறை, போர் உத்தி, என பல தகவல்கள் திரைக்கதையோடு நமக்கு சொல்லப்படுகிறது. மிகுந்த ஆச்சர்யம். படம் முழுக்க அரசியல் பேசும் படம். ஜனநாதன், தமிழ் சினிமாவில் உங்கள் இருப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
.
ஜெயம் ரவி பேராண்மையாக இருக்க, மற்ற ஐந்து பெண்களும் இளமையா செமையா இருக்காங்க. அந்த அருவி பாட்டு.. ம்ம்ம்ம்.. மேலும் ஜெயம் ரவியும், மற்றவர்களும், அந்த கல்லூரி பெண்களும், எல்லாருமே கட்சிதமாக இயக்குனர் சொல்படி நடித்திருப்பதால் படம் நல்லாவே இருக்கு. மேலும் இப்படம் ஒரு Forest Action Adventure படம். படம் பிடித்த இடங்கள் அவ்வளவு அழகு. பல காடுகளில் பல இடங்களில் படம் பிடித்து, தெளிவாக அவற்றை சேர்த்து முழுமையாக ஒரே காட்டில் எடுத்து போன்று நமக்கு காட்டி இருப்பது சிறந்த திட்டமிடல். நல்ல ஒளிப்பதிவு. பின்னணி இசையும் நல்லாத்தான் இருக்கு. (மேலும் படத்தின் முதல் பாடல் நல்லா இருக்கு. மற்றவை ok.) முதல் பகுதி மட்டும் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் இருக்கு. இரண்டாம் பகுதி செம வேகம்.
.
ஜெயம் ரவியும், மற்ற ஐந்து பெண்களும், பதினாறு பேர் சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படையை தடுத்து நிறுத்துவதும், அவர்களை கொலை செய்வது மிகுந்த சாமர்த்தியம். வெளிநாட்டு கூலிப்படைக்கு தலைமை தாங்கும் Roland Kickinger -ஐ ஜெயம் ரவி கொலை செய்வது கூட அருமையான சண்டைக்காட்சி. சிறு சிறு கத்திகளால் கொலை செய்வது.(லாஜிக் மீறல்கள் இல்லாமல் இல்லை. இந்த ஐந்து பெண்களும் நாயகனும் போர் ஆயுதங்களை அசால்ட்டாக பயன்படுத்துவது போன்றது. கொஞ்சம் அவற்றை ஒதுக்கி விட்டு படம் பார்க்கலாம்)
.
இன்றைய காலத்து நகர கலாச்சார பெண்களையும் அதே அளவுக்கு யதார்த்தமாக காட்டியது நல்லது. ஆனால் இந்த காலத்து இளைஞர்களும் சாதி மீது மிகுந்த பற்றுடையவர்களா என்பது எனக்கு எழுந்த கேள்வி. இன்றைய நகர கலாச்சாரத்தில் இரண்டே சாதிகள்தான் எனக்கு தெரிந்து. பணம் இருப்பவன். பணம் இல்லாதவன்.
.
மொத்தத்தில் ஒரு நல்ல Forest Action Adventure படம். சமூக அரசியலை பேசும் படம். சமூக அரசியலை பேசவிடாது அமுக்க பார்க்கும் சென்சார் போர்டின் அரசியல். நம் நாட்டின் நிலைமை இதுதான். தவறாமல் பாருங்கள். இம்மாதிரியான படங்களை வரவேற்போம்.
.
பேராண்மை - ஜனநாதனும் ஜெயம் ரவியும் பேராண்மையானவர்கள்.
பேராண்மை - A good Forest Action Adventure.

நன்றி : திரு. Saravana Kumar MSK

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails